58 வயதில் நடிகர் முத்துக்காளை செய்த காரியம்.. வாயடைத்துப் போன ரசிகர்கள்..!

0

பிரபல நடிகர் முத்துக்காளை தற்போது தனது 58 வயதில் 3வது கல்லூரி பட்டத்தை பெற்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.நடிகர் முத்துக்காளை
சினிமாவில் காமெடி நடிகராக வலம் வரும் நடிகர் முத்துக்களை ராஜபாளையத்தை பூர்வீகமாக கொண்டவர். இவர் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார்.சினிமாவில் கொண்ட ஆர்வத்தில் நடிப்பதற்கு வந்த இவர், ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். ஆனால் சரியான வாய்ப்பு கிடைக்காமல் மீண்டும் சொந்த ஊருக்கே சென்று தையல் கலைஞராக வேலை செய்துள்ளார்.

பின்பு சினிமா துறையில் மீண்டும் நுழைந்த அவர் வடிவேலுவுடன் சேர்ந்து பல கொமடிகளில் நடித்தார். அதில் அவருடன் சேர்ந்து செத்து செத்து விளையாடலாம் என்ற கொமடி முத்துக்காளைக்கு பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது.

ஆனாலும் சரியான வாய்ப்பு இல்லாமல், படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். அதன்படி, 2017ஆம் ஆண்டு பி.ஏ. வரலாறு பிரிவில் இரண்டாம் வகுப்பிலும், எம்.ஏ. தமிழ் இலக்கியம் பிரிவில் கடந்த 2019ம் ஆண்டு முதல் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

பின்பு தொடர்ந்து தமிழ் இலக்கியம் படித்த முத்துக்காளை தனது மூன்றாண்டு தேர்வு முடித்து, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, தனது 58வது வயதில் பட்டத்தையும், பாராட்டையும் வென்றுள்ளார்.

தமிழில் தவசி, என் புருசன் குழந்தை மாதிரி, யூத், கார்மேகம், அன்பே சிவம், புன்னகை பூவே, திவான், வின்னர், எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, மொழி, சிவாஜி, காத்தவராயன், தோரணை, பட்டத்து யானை ஆகியப் படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.