வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓடிப்போய் உதவிய ஜி.பி.முத்து- என்ன செய்துள்ளார் பாருங்க..!

0

ஜி.பி.முத்து
டிக்டாக் மூலம் தமிழ் சினிமா மக்களிடம் பிரபலமானவர் ஜி.பி.முத்து. பின் அந்த சாப்ட்வேர் முடக்கப்பட பின் தனக்கு என்று ஒரு யூடியூப் பக்கம் திறந்து வீடியோக்கள் வெளியிட்டு வந்தார்.பின் அவருக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு தான் பிக்பாஸ், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக எண்ட்ரி கொடுத்தார். நீண்ட நாட்கள் நிகழ்ச்சியில் இருப்பார் என்று பார்த்தால் அவர் வீட்டில் தாக்குபிடிக்கவில்லை.

தான் உடனே வெளியே வர வேண்டும் என்னை வெளியே அனுப்புங்கள் என புலம்பி வர பின் பிக்பாஸால் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகளும் வந்தன.

முத்துவின் உதவி
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளால் மக்கள் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அறந்தாங்கி நிஷா, மாரி செல்வராஜ் என பலரும் உதவிவரும் நிலையில் ஜி.பி.முத்துவும் தனது பங்கிற்கு உதவியுள்ளார்.

அவர் வெளியிட்ட வீடியோவில் நான் ஸ்ரீவைகுண்டம், கருங்களம் பகுதிக்கு சென்றபோது குழிக்குள் என்னுடைய கார் மாட்டிக்கொண்டது.4,5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலமே இல்லை, நான் என்னால் முடிந்த அளவுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகிய பொருட்களை வாங்கி கொடுத்திருக்கிறேன்.என்னுடைய வீடு ஓட்டு வீடுதான் அதனால் அங்கே கொஞ்சம் ஒழுகத்தான் செய்யும், இருந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.