போண்டா மணி ஈழத்தமிழரா? மரணத்துக்கு பின் வெளிவரும் சோக பின்னணி..!

0

கடந்த ஓராண்டாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நகைச்சுவை நடிகர் போண்டா மணி நேற்று முன்தினம் காலமானார்.இதன் பின்னர் வெளியாகியுள்ள இவரின் வாழ்கை வரலாறு தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.நடிகர் போண்டா மணி
தமிழ் சினிமாவில் பிரபல நகைச் சுவை நடிகரான போண்டா மணி இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்.இவர், 1991 ஆம் ஆண்டு பாக்யராஜின் பவுனு பவுனுதான் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.ரஜினிகாந்தின் முத்து உள்ளிட்ட சில திரைப்படங்களில் போண்டா மணி தலைகாட்டி இருந்தாலும், விவேக்குடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடிக்க தொடங்கிய பிறகு, தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

உடல்நிலை பாதிப்பு
ரசிகர்களை தனது நகைச்சுவை திறனால் மகிழ்வித்த போண்டா மணி, ஒரு படப்பிடிப்பின் போது சாக்கடையில் விழுந்ததில், கழிவுநீரை பருகும் சூழல் உருவானது.

இதனால் அவரது இரு சிறுநீரகங்களுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, கடந்த சில மாதங்களுக்கு முன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் போண்டா மணி.இதனையடுத்து மருத்துவமனையில் மாதம் ஒருமுறை மருத்துவமனை சென்று டயாலிசிஸ் செய்து வந்துள்ளார்.

அவருக்கு சில சினிமா நட்சத்திரங்கள் நிதி உதவி அளித்த நிலையில், கடுமையான போராட்டத்திற்கு பின், போண்டா மணி மீண்டு வந்தார். நீண்ட ஓய்வுக்குப் பின் தேறி வந்த போண்டா மணி, அதன் பின் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.இருப்பினும் அவரது உடல்நிலை பலவீனமாக இருந்ததுள்ளது, இருப்பினும் குடும்ப சூழல் காரணமாக வாய்ப்புகளை தேடிக் கொண்டிருந்தார். போண்டா மணி மரணம் இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் பல்லாவரத்தில் உள்ள வீட்டில் மயங்கி விழுந்துள்ளார்.

பதறிப் போன குடும்பத்தார் உடனடியாக அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவரது இரு சிறுநீரகங்களும் செயல் இழந்ததாகவும், அதன் காரணமாக ஏற்கனவே உயிர் பிரிந்ததாகவும் தெரிவித்தனர்.குடும்பத்தை இழந்த சோகம்
நடிகர் போண்டா மணி, ஈழத்தில் பிறந்தவர். இவருடன் 16 பேர் பிறந்துள்ளனர். அதில் 8 பேர் இலங்கை இனக்கலவரத்தில் இறந்து போயுள்ளனர்.

அது மட்டுமன்றி அவரது தாய்-தந்தையர் கூட இலங்கை போரில் உயிரிழந்துள்ளனர். இந்த கலவரத்தில் போண்டா மணியின் இரண்டு கால்களிலும் குண்டடி பட்டுள்ளது. அதில் ஒரு காலில் இருந்த குண்டினை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.இன்னொரு காலில் இருந்து குண்டை அகற்ற முடியாததால் நடக்க முடியாத நிலைக்கு சென்றுள்ளார். இருப்பினும், அதே காலுடன் ஊர் ஊராக சென்று கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது குடும்பத்தினரை காப்பாற்றியுள்ளார்.பாேண்டா மணியின் உயிரிழப்பு திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.