புதிய முயற்சியில் இறங்கிய மனைவி.., வாழ்த்து தெரிவித்த நடிகர் விஷ்ணு விஷால்..!

0

நடிகர் விஷ்ணு விஷால் மனைவி எடுத்த புதிய முயற்சிக்கு அவர் தனது சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து பகிர்ந்திருக்கிறார்.நடிகர் விஷ்ணு விஷால்
நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா கட்டா ஆகிய இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

ஜூவாலா கட்டா ஒரு பேட்மிண்டன் வீராங்கனை ஆவார். இவர் பல சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் தற்போது ஜுவாலா கட்டா பெண்களுக்கு கிரிக்கெட் அகாடமி ஒன்றை தொடங்கியுள்ளார்.

இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் ”பெண்கள் கிரிக்கெட் அகாடமி தொடங்கி உள்ளோம் என்றும் பெண்களின் கிரிக்கெட் தரத்தை உயர்த்துவதற்காக பெருமையுடன் தொடங்கியுள்ளோம்” என்றும் ஜுவாலா கட்டா தெரிவித்துள்ளார்.


இதனை அடுத்த விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளத்தில் ”இது ஒரு ஆரம்பம், இந்த புதிய முயற்சிக்கு தனது வாழ்த்துக்கள்” என்றும் தெரிவித்துள்ளா புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.