பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் இந்த விஷயங்கள் செய்யாமல் பாடவே மாட்டாரா?- பிரபலம் பகிர்ந்த விஷயம்..!

0

பாடகர் SPB
பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு ஒரு அறிமுகமே தேவையில்லை. 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி உலக அளவில் புகழ் பெற்ற பாடகராக வலம் வந்தவர்.தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் பாடியுள்ளார். பாடும் நிலா என ரசிகர்களால் அழைக்கப்பட்ட இவர் 16 இந்திய மொழிகளில் பாடியிருக்கிறார்.


இளையராஜா முதல் இப்போது உள்ள இளம் இசையமைப்பாளர் வரை அனைவரது இசையிலும் பாடியுள்ளார். ஆனால் இப்போது இவர் நம்முடன் இல்லை என்பது பெரிய வருத்தமாக தான் உள்ளது.

பிரபலத்தின் பேட்டி
அண்மையில் இளம் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா ஒரு பேட்டியில் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், அவர் பாட வரும்போது எப்போதுமே 3 நிறத்தில் பேனாக்களை வைத்திருப்பார், எங்கு எப்படி பாட வேண்டும் என்பதை அந்த கலர் பேனாக்களை கொண்டு அவருக்கு ஏற்ற வகையில் குறித்துக் கொள்வாராம்.

அதேபோல் அவர் பாடும் படத்தில் யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள், நாயகன்-நாயகி யார் என்பதையும் அறிந்துகொண்டு தான் பாடுவார் என நிவாஸ் கூறியுள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.