அஜித்தின் ராஜா பட நடிகை பிரியங்காவை நியாபகம் இருக்கா?- ஆளே மாறி எப்படி இருக்காங்க பாருங்க, லேட்டஸ்ட் போட்டோ..!

0

அஜித்தின் ராஜா
எழில் இயக்கத்தில் 2002ம் ஆண்டு அஜித், ஜோதிகா, பிரியங்கா, வடிவேலு, சோனு சூத் என பலர் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் ராஜா.ராஜ்குமார் இசையமைப்பில் தயாராகி வெளியான இப்படம் நல்ல ஹிட் படமாக அமைந்தது. அழகிய காதல் கதையை மையமாக கொண்டு தயாராகி இருந்த இப்படம் இப்போதும் சில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

பிரியங்கா இந்த படத்தில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்களிடம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா.1998ம் ஆண்டு பெங்காலி திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்தார்.2002ம் ஆண்டு விஜயகாந்த் நடித்த ராஜ்ஜியம் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு வந்த இவர் அடுத்து ராஜா படத்தில் நடித்தார்.

பின் சில படங்களில் நடித்துவந்த இவர் பட வாய்ப்புகள் குறைந்ததால் கன்னட நடிகர் உபேந்திராவை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

தற்போது பிரியங்கா தனது குடும்பத்துடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.