கணவருடன் விவாகரத்து, மகனுடன் தனியாக வாழும் சீரியல் நடிகை கிருத்திகா- மறுமணம் எப்போது?

0

நடிகை கிருத்திகா
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி என்ற சூப்பர் ஹிட் தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை கிருத்திகா.பெரும்பாலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் என்ற தொடரில் மூத்த மருமகள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.நடனம் மீதும் ஆர்வம் கொண்ட இவர் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடனமாடி இருக்கிறார். நடன நிகழ்ச்சியில் பங்குபெற்ற போதே அவருக்கு திருமணமும் நடந்துள்ளது.

கணவருடன் விவாகரத்து
ஆனால் கிருத்திகாவிற்கு நடந்த திருமணம் நிலைக்கவில்லை, இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

அண்மையில் இவர் ஒரு பேட்டியில், திருமணம் ஆனதிலிருந்தே எங்களுக்குள் பல பிரச்சனைகள் வந்தது, அதற்குப் பிறகு எல்லாம் பேசி தான் இந்த முடிவு எடுத்தோம்.
அந்த சமயத்தில் எனக்கு இருந்த ஒரே கவலை என்னுடைய மகன் தான், யாராவது தந்தை பற்றி கேட்கும் போது கஷ்டப்படுவானோ என்று தான் வருத்தப்பட்டேன்.

ஆனால் என்னுடைய அண்ணன் இவனுக்கு அப்பாவாக இருந்து வழி நடத்துகிறார், எனக்கு அந்த கவலையும் இல்லை என கூறியுள்ளார். இவனை நான் என்னுடைய அண்ணனுக்கு தத்து கொடுத்து இருக்கிறேன் என கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.