கழுத்தில் புது தாலியுடன் கிங்ஸ்லி- சங்கீதா எப்படி இருக்காங்க பாருங்க.. வைரல் புகைப்படம்..!

0

கிங்ஸ்லி- சங்கீதா
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவர் தான் ரெடின் கிங்ஸ்லி.இவர் நெல்சன், நயன்தாரா கூட்டணியில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தின் மூலம் கோலிவுட்டிற்குள் அறிமுகமானார்.இதனை தொடர்ந்து டாக்டர், அண்ணத்த, ஜெயிலர், பீஸ்ட் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார்.

தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் இவரும் தற்போது பிரபலமாகிக் கொண்டு வருகிறார்.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றதுடன் சினிமா பிரபலங்கள் பலர் இவர்களுக்கு திருமண வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து கின்ஸிலி – சங்கீதா இருவரும் திருமணத்திற்கு பின்னர் ஜோடியாக சுற்றித்திரியும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.புகைப்படத்தில் பார்க்கும் போது புது தாலியுடன் சங்கீதா மங்களகரமாக இருக்கிறார். அத்துடன் அவருடன் சிறுமியொருவரும் வயதானவர் ஒருவரும் இருக்கிறார்கள்.

சங்கீதாவின் முதல் கணவருக்கு ஒரு பிள்ளை இருப்பதாக செய்தி வெளியாகிய நிலையில் அந்த சிறுமி தான் இந்த குழந்தையா? என நெட்டிசன்கள் சந்தேகித்து வருகின்றனர்.ஆனால் இது தொடர்பான பூரண தகவல்கள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.