இணையத்தை ஆக்கிரமிக்கும் நயன்-விக்கியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!மூன்று முக்கியமான வரிகள் என்ன தெரியுமா..!

0

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஒன்றாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.நடிகை நயன்தாரா
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று புகழப்படுபவர், நயன்தாரா. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட்டில் புகழின் உச்சத்தில் இருக்கின்றார்.

இவர், இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்துள்ள ஜோடி, நயன்தாரா-விக்னேஷ் சிவன். ‘நானும் ரௌடிதான்’ படத்தில் ஒன்றாக பணிபுரிந்த இவர்கள், 5 ஆண்டுகள் காதலித்து வந்தனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவர்களின் திருமணம் நடைப்பெற்றது. நயன், சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கினார். 9 ஸ்கின்ஸ் என்று புதிதாக ஒரு அழகு சாதன பொருட்கள் பிராண்டை தொடங்கினார்.

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் புதுப்புது படங்களில் கமிட் ஆகியுள்ளனர். நயன், நடித்த அன்னபூரணி படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. மேலும் விக்னேஷ் சிவன், எல்.ஐ.சி படத்தை இயக்கி வருகிறார்.

இவர்களுக்கு, உயிர்-உலக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன் இருக்கும் புகைப்படங்களும் சமீபத்தில்தான் வெளியானது. நயன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.தற்போது தனது கணவருடன் சாமி கும்பிடும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த போஸ்டில் ‘காதல், கடவுள் மற்றும் நல்ல செயல்களை நம்புங்கள்’ என கேப்ஷன் பதிவிட்டிருக்கின்றது.குறித்த புதைப்படங்கள் தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி லைக்குகளை குவித்து வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.