வருங்கால மனைவி குறித்து மனம்திறந்த KPY பாலா… கொண்டாடும் சென்னை மக்கள்..!

0

புயலால் பாதிக்கப்பட்டு வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களுக்கு நடிகர் பாலா நேரில் சென்று உதவியதுடன் தற்போது தனது திருமணத்தை குறித்தும் பேசியுள்ளார்.நடிகர் பாலா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப் போவது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் பாலா.சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களை மகிழ்வித்து வருகின்றார்.இவர் பிரபல ரிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புகழின் உச்சத்திற்கு சென்றாலும், தனக்கென்று எதையும் சேர்த்து வைக்காமல் தன்னால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்து வருகின்றார்.

ஆம் பழைய நடிகர், நடிகைகள் தற்போது நடிக்கமுடியாமல் நோயினால் பாதிக்கப்பட்டு வந்தால், அவர்களை முதல்நபராக சென்று பார்த்து நலம்விசாரிப்பதுடன், பண உதவியையும் செய்து வருகின்றார்.சமீபத்தில் கிராமம் ஒன்றிற்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்து பெரும் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தி மக்கள் மனதில் மீண்டும் உச்சத்திற்கு சென்றார்.

திருமணம் குறித்து பாலா
கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக்ஜாம் புயலால் சென்னை மக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்ட போது நடிகர் பாலா தான் சேர்த்து வைத்த பணம் 2 லட்சம் மற்றும் சீட்டு போட்ட பணம் 2 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் என அனைத்தையும் மக்களுக்காக செய்துள்ளார்.

இந்நிலையில் ஒரே நாளில் சென்னை மக்களின் மனதில் இடம்பிடித்த இவர் கூறுகையில், இனியும் உதவி செய்து கொண்டே இருப்பேன் என்றும் தன்னை வாழ வைத்த சென்னை மக்களுக்கு 2015ல் செய்ய முடியாத உதவியை தற்போது செய்துள்ளேன்.

தனது தாய் தந்தை நான் செய்யும் இந்த உதவிக்கு ஆதரவு கொடுக்கின்றனர் என்றும் திருமணத்தை குறித்து கேட்ட போது, தனக்கு 3 வேளை சாப்பாடு, சொந்த பணத்தில் ஆடை எடுத்து அணிவது தான் குறிக்கோளாக இருந்தது… அதனை அடைந்துவிட்டேன்… இதை மனதில் வைத்துக்கொண்டு பெண் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன்.ஆனால் இப்பொழுது இல்லை இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்றும் அரசியல் குறித்து கேட்ட கேள்விக்கு பதவி இல்லாமல் உதவி செய்தாலே போதும்… நான் அந்த அளவிற்கு பெரிய ஆள் கிடையாது என்று தன்மையாக பேசியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.