மிக்ஜாம் புயலின் போது அஜித் வீட்டிலிருந்து ரகசியமாக செய்த விடயம்.. பயில்வான் அவிழ்த்த உண்மை..!

0

நடிகர் அஜித் மிக்ஜாம் புயலின் போது தனது வீட்டில் 100 பேரை தங்கவைத்து அவர்களுக்கு பணஉதவி செய்த உண்மை தற்போது வெளியாகியுள்ளது.சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம்
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் மிக்ஜாம் புயல் உருவாகியது.இதனால் சென்னையில் கனமழை காரணமாக மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இதனால் பல பகுதிகளில் மக்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் உயிரைக் பாதுகாத்துக் கொள்வதற்கே கடும் சவாலை மேற்கொண்டுள்ளனர்.

கால்துறையினர், பேரிடர் மீட்பினர், தீயணைப்பு துறையினர் என பலரும் மக்களை காப்பாற்ற போராடி வந்துள்ளனர். இதனால் சென்னை மக்களின் இயல்வு நிலை மிகவும் மோசமாகியது. படகு மூலம் அவர்களின் சிறு சிறு தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அஜித் செய்த உதவி
நடிகர் விஷ்ணு விஷால், அமீர்கான் இவர்களும் மழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட நிலையில், பின்பு தீயணைப்பு மீட்பு குழுவினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.இவர்களை மீட்ட பின்பு நடிகர் அஜித் அவர்களுக்கு உதவி செய்துள்ளார். அஜித் பிரபலங்களுக்கு மட்டும் உதவியுள்ளார் என்று விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் பிரபல நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் பல உண்மைகளை உடைத்துள்ளார். அதாவது நடிகர் அஜித் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் 100 பேரை, தன்னுடைய வீட்டில் தங்க வைத்ததுடன், அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்துள்ளார்.

பின்பு இயல்புநிலை திரும்பிய பின்பு குடும்பத்திற்கு பத்தாயிரம் நிதிஉதவி அழித்து அவர்களை அனுப்பிவைத்துள்ளார். இவற்றை வெளியுலகிற்கு தெரியாமல் அஜித் செய்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.