அந்த ஒரே விசயத்துக்காக பெற்ற அம்மாவே அப்படி சொன்னாங்க!! சீரியல் நடிகை ஷபானா அனுபவித்த டார்ச்சர்..!

0

செம்பருத்தி சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை ஷபானா ஷாஜகான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மகாலட்சுமி சீரியலில் செழியன் ரோலில் நடித்த நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்த்ததால் அதைமீறி திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 3 வருடங்களான நிலையில் ஷபானா கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஷபானா இதற்கு முன் அளித்த பேட்டியொன்றில் தன் அம்மா தன்னை எப்படி நடத்தினார் என்ற உண்மையை பகிர்ந்திருக்கிறார். இஸ்லாமிய பெண் என்பதால் சீரியலில் பொட்டு வைத்து நடித்த ஒரே காரணத்திற்காக என் குடும்பத்தினர் ஒரு ஆண்டு காலம் என்னிடம் பேசாமல் இருந்தனர்.

அதுமட்டுமில்லாமல் தன் இளமை பருவத்தில் இருந்தே என் அம்மா ஒரு இந்து பையனை மட்டும் திருமணம் செய்து கொள்ளாதே.. இந்து பையனை காதலிக்காதே என்று மாத்திரை மாதிரி சொல்லுவார்கள்.

அதனால் இந்து பையனை தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற நிலை தோன்றியதாக ஷபானா கூறியிருக்கிறார். அதன்பின் தான் நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் இருவரையும் பிரிக்கவும் திட்டம் போட்டிருக்கிறார்கள் ஷபானாவின் குடும்பத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.