கணவர் ஏற்பாட்டில் யாழில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி: குடும்பத்துடன் இலங்கை வந்த ரம்பா..!

0

கணவர் ஏற்பாட்டில் யாழில் நடக்கவிருக்கும் இசை நிகழ்ச்சியை காண ரம்பா குடும்பத்துடன் இலங்கை வந்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.இசை நிகழ்ச்சி
NORTHERN UNIஇன் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் இடம்பெறவுள்ளது.இவ் இசை நிகழ்ச்சியானது ஐபிசி தமிழ் மற்றும் லங்காசிறி ஊடகத்தின் பிரதான அனுசரணையுடன், முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தென்னிந்திய பாடகர்கள், நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பல பிரபலங்கள் தற்போது இலங்கைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.றீ(ச்)ஷா பண்ணையில்..

அந்த வகையில், northern Uniயின் உரிமையாளரான இந்திரனும் அவரது, மனைவி நடிகை ரம்பாவும் தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இவர்கள் தற்போது கிளிநொச்சி – இயக்கச்சியிலுள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணைக்கு விஜயம் செய்துள்ளதுடன் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது ஐ.பி.சி தமிழ், லங்காசிறி குழுமத்தின் தலைவரும், புலம்பெயர் தமிழ் தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரனுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.

இது போன்று உள்நாட்டு, வெளிநாட்டு கலைஞர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோரும் வந்திருந்து தங்களது விடுமுறை நாட்களை மகிழ்ச்சியோடு கழிப்பதுடன் தமிழர் பாரம்பரியங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் றீ(ச்)ஷா பண்ணையில் பெற்றுக் கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.