மகன் வயதைவிட குறைவான பெண்ணுடன் தொடர்பு!! பப்லுவை கடுப்பாகிய காத்து கருப்பு..!

0

சமுகவலைத்தளங்கள் தற்போது ஹாட் டாப்பிக்காக இருந்து வருவது பப்லு பிரித்விராஜ் – ஷீத்தல் காதல் விவகாரம் தான்.58 வயதானவர் மகன் வயதைவிட குறைவான வயதுடையை ஷீத்தல் என்ற பெண்ணை காதலித்து ஒன்றாக வாழ்ந்து வருவது குறித்தும் தற்போது இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாகவும் செய்திகள் வைரலாகி பேசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பல பேட்டிகளில் பப்லு விளக்கங்களை கொடுத்து வரும் நிலையில் யூடியூப் பிரபலம் காத்து கருப்பு கலை அவர்கள் எடுத்த பேட்டியிலும் கலந்து கொண்டிருக்கிறார்.

அந்த பேட்டியில் வில்லங்கமான கேள்விகளை எழுப்பிய காத்து கருப்புவிடம் யார்ரா நீ.. எந்திரிச்சு போ என்று கோபத்தில் பேசியிருக்கிறார் பப்லு. பின் தொடர்ந்து பேசிய காத்து கருப்பு, 60 வயதுள்ள நீங்கள் பையனை விட குறைவான பெண்ணை இரண்டாம் கல்யாணம் பண்ணுவது தப்பாக தெரியவில்லை என்று கேட்டுள்ளார்.

அதற்கு பப்லு, உனக்கு எப்படி தோன்றுகிறது என்றது, தவறு தான் என்று கூறியிருக்கிறார் காத்து கருப்பு. அது உன் கருத்து, உனக்கு பிடித்த ஒரு விசயத்தை எனக்கு பிடிக்க வேண்டும் என்று நீ கட்டாயப்படுத்தக்கூடாது..

உனக்கு பிரியாணி தான் பிடிக்கும் என்றால் சாப்பிடு ஆனால் அதனை சாப்பிடக்கூடாது அல்லது வேறு உணவை சாப்பிடு என்றோ நான் உன்னை வற்புறுத்தக்கூடாது என்று கூறியிருக்கிறார். தனிப்பட்ட விசயத்தை பேச முடியாது என்றும் பப்லு பிரித்விராஜ்.மேலும் நீங்கள் தான் அந்த பொண்ணுக்கு தவறு சரி என்று சொல்லி கொடுத்திருக்க வேண்டும் என்று கூறி பப்லுவை காத்து கருப்பு கலை கடுப்பேற்றி இருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.