தாமிரபரணி திரைப்பட நடிகை பானுவை நியாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

0

தமிழில் தாமிரபரணி என்ற திரைப்படத்தின் மூலமாக பானுவாக பலருக்கும் பரிச்சயமான நடிகை முத்தாவின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.நடிகை முத்தா
தமிழில் தாமிரபரணி என்ற திரைப்படத்தின் மூலமாக பானுவாக அறிமுகமானவர் தான் நடிகை முத்தா.மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்திருந்தார்.

கடந்த 18 ஆண்டுகளாக திரைத்துறையில் பயணித்து வந்தாலும், மிக குறைவான அளவிலேயே படங்களை நடித்து, மக்கள் மத்தியில் நிறைவான வரவேற்பை பெற்றவர் தான் நடிகை பானு இவருடைய இயற்பெயர் முக்தா.

கேரளத்தை சேர்ந்த இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ஒரு மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது கலை பயணத்தை தொடங்கினார்.அதன் பிறகு கடந்த 2007 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில், விஷால் நடிப்பில் வெளியான “தாமிரபரணி” என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இவர் கால்பதித்தார்.

அதன் பிறகு இவர் தொடர்ச்சியாக தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கு மீண்டும் ஒரு நல்ல வரவேற்பை கொடுத்த திரைப்படம் என்றால் அது கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ஆர்யா மற்றும் சந்தானத்தின் “வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க” என்கின்ற திரைப்படம் தான்.

இறுதியாக தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான “சகுந்தலாவின் காதலன்” என்கின்ற திரைப்படத்தில் நடித்த நடிகை மும்தா அதன்பிறகு பெரிய அளவில் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை.கடந்த 2015 ஆம் ஆண்டு ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்து தற்பொழுது குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக கழித்து வருகிறார். மலையாள மொழிகளில் அவ்வப்போது திரைப்படங்களில் நடித்து வரும் முத்தாவிற்கு ஒரு அழகிய மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.