விடாமுயற்சி படப்பிடிப்புக்கு கிளம்பிய அஜித்.. விமான நிலையத்தில் இருந்து வெளிவந்த வீடியோ..!

0

விடாமுயற்சி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், பிரியா பவானி ஷங்கர், ரெஜினா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரு வாரங்களுக்கு முன் இடைவேளை விடப்பட்டது. அசர்பைஜானில் இருந்து விடாமுயற்சி படக்குழு மீண்டும் சென்னை திரும்பினார்கள்.

விமான நிலையத்தில் அஜித்
இந்நிலையில், தற்போது மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் துவங்கியுள்ளது. ஆம், இதனால் தற்போது அனைவரும் அசர்பைஜானுக்கு கிளம்பி சென்றுள்ளனர்.

நடிகர் அஜித் இந்த காலை அசர்பைஜானுக்கு செல்லும் வீடியோ விமான நிலையத்தில் இருந்து வெளிவந்துள்ளது. இதை ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.இதோ அந்த வீடியோ..

Swag 🔥🔥🔥#AjithKumar #VidaaMuyarchi pic.twitter.com/7HuDiUEvYE

— EMPEROR AJITH FANS (@EmperorAjithFC) December 9, 2023

Leave A Reply

Your email address will not be published.