24 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த பிரபல நடிகை..!அ-தி-ர்-ச்-சியில் திரையுலகம்..!

0

பிரபல மலையாள நடிகை லக்ஷ்மிகா சஜீவன், தனது 24 வயதில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நடிகை லக்ஷ்மிகா சஜீவன்
மலையாளத்தில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான காக்கா படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை லக்ஷ்மிகா சஜீவன்.இப்படத்தில் உருவத்தை விட மன அழகு தான் உண்மையான அழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியதுடன், ரசிகர்களின் பாராட்டையும் பெற்றது.

தொடர்ந்து, புழையம்மா, சவுதி வெள்ளக்கா, உணரே, ஒரு மயந்தன் பிரேமகதா, இறுதியாக கூன் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில், துபாயின் ஷார்ஜாவில் உள்ள வங்கி ஒன்றில் வேலைப் பார்த்து கொண்டிருந்த லக்‌ஷ்மிகா சஜீவன் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது திடீர் மரணம் மலையாள திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இவர் கடைசியாக நவ.2ம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இருளையும் தாண்டிய ஒளி நம்பிக்கை கொடுக்கும்” என பதிவிட்டிருந்து குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.