காதலை வெளிப்படுத்திய சீரியல் நடிகை.. யார் கா த லர் தெரியுமா ?கூடிய சீக்கிரம் டும் டும் தான் ?

0

சீரியல் நடிகை பவித்ரா தன்னுடைய காதலர் மற்றும் திருமணம் குறித்து வெளிப்படையாக பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.சின்னத்திரை ஜோடி
பொதுவாக சின்னத்திரையில் கொஞ்ச நாட்கள் இணைந்து நடிக்கும் பிரபலங்கள் காலப்போக்கில் காதலர்களாகவும் திருமண ஜோடிகளாகவும் மாறுவது வழமை.அந்த வரிசையில் அடுத்து திருமணத்திற்கு தயாராக இருக்கும் ஜோடியாக அமல்ஜித் – பவித்ரா கூறப்படுகின்றார்கள்.

இவர்கள் இருவரும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “அம்மன் ” சீரியலில் இணைந்து நடித்துள்ளனர்.முதல் பாகம் வெற்றியினை தொடர்ந்து இரண்டாம் பாகத்தில் இருவரும் ஜோடியாக கலக்கியுள்ளனர். சீரியல் ஜோடிகளான இவர்கள் சமீபகாலமான காதலித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இவர்களுக்குள் இருக்கும் காதலை வெளிப்படையாக உறுதிப்படுத்தியுள்ளனர்.இதனை தொடர்ந்து அமல்ஜித் – பவித்ரா இரு வீட்டாரின் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளயிருக்கிறார்கள்.

இதே வேளை, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அமல்ஜித் – பவித்ரா, நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்கிளில் பகிர்ந்து வருகிறார்கள்.

இதனை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள் திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.