உடல் அமைப்பு குறித்து கேலி!! ப தி லடி கொடுத்த கீர்த்தி பாண்டியன்..!

0

கீர்த்தி பாண்டியன்
பிரபல நடிகரான அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன், சமீபத்தில் நடிகர் அசோக் செல்வனை திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் கண்ணகி திரைப்படம் வருகிற டிசம்பர் 15 தேதி வெளியாக இருக்கிறது. அதே தினத்தில் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள சபாநாயகன் படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

பதிலடி
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட கீர்த்தி பாண்டியன், தன்னை பற்றி வந்த மோசமான கமெண்ட் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், நான் நீண்ட காலமாக குள்ளமாக, ஒல்லியாக இருந்தேன். இன்னொன்று, நான் மிகவும் கருப்பாக இருந்தேன். இதற்கு காரணம் என்னவென்றால் நான் எப்போதுமே வெயிலிலே சுற்றிக்கொண்டிருந்தேன்.

அந்த சமயங்களில், தன்னுடைய தோற்றத்தை பற்றி, எதிர்மறையான விமர்சனங்கள் வரும்போது பயங்கரமாக அழுவேன்.

ஆனால் இப்போது யோசித்துப் பார்த்தால், அந்த காலகட்டத்திற்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன் என்று கீர்த்தி பாண்டியன் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.