மக்களின் துயர் துடைக்க களத்தில் இறங்கிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்- டுவிட்டரில் ஆதரவு..!

0

மக்களின் துயர் துடைக்க ஒன்றாக கைக்கோர்ப்போம் என விஜய் பதிவிட்ட டுவிட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.புயல்
இந்தியா – சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் புயலால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.வெள்ளம் காரணமாக அத்தியவசியமான தேவைகளை கூட நிறைவு செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.மேலும் சமூக வலைத்தளங்களில் அடிப்படை தேவைகளையும் வெள்ளத்திலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்காகவும் உதவி செய்யுமாறு உதவி கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மீடியா பிரபலங்கள், நடிகர்கள் என வேறு பகுதியில் இருப்பவர்கள் வருகை தந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.

விஜயின் டுவிட்டர் பதிவு
அந்த வகையில் சூர்யா, கார்த்தி மற்றும் ஹரிஷ் கல்யாண் போன்றவர்களும் பணங்கள் கொடுத்து உதவி செய்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் மக்களுக்கு உணவு மற்றும் மீட்பு பணிகளை செய்து வருகின்றன.இது குறித்து நடிகர் விஜய் அவரின் டுவிட்டர் பக்கத்தில், “ துயர் துடைப்போம் கைக்கோர்ப்போம்..” என கருத்து பகிர்ந்துள்ளார்.

அத்துடன் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

 

Leave A Reply

Your email address will not be published.