நடிகர் பப்லூ, ஷீத்தலை பி ரி ந்துவிட்டாரா? லைக் செய்து உறுதிப்படுத்திய ஷீத்தல் அதி ர் ச் சியில் ரசிகர்கள்..!

0

இவ்வாண்டு துவக்கத்தில் இணையத்தில் புயலை கிளப்பிய நடிகர் பப்லூ, ஷீத்தல் ஜோடி பிரிந்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.நடிகர் பப்லூ பிருத்வீராஜ்
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகரான பப்லூ பிருத்வீராஜ், ஒரு காலத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தார். ஹீரோவாக இருந்த அவர், தற்போது குணச்சித்திர நடிகராக மாறியுள்ளார்.தற்போது அவர், பல நல்ல படங்களில் நடித்து வருகின்றார். 57 வயதகடந்துவிட்டபோதும் தனது கட்டுக்கோப்பான உடல் அமைப்பால் ரசிகர்கள் கவர்ந்தவர் அவர். இந்நிலையில் இவ்வாண்டு துவக்கத்தில் நடிகர் பப்லூ, திடீரென தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தார், காரணம் அவர் தன்னை விட 30 வயது குறைவான ஷீத்தல் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

பப்லூக்கு ஏற்கனவே திருமணமாகி 23 வயதில் ஒரு மகன் இருக்கம் நிலையில் இவர் இரண்டாவது திருமணம் செய்தது பெரும் ச ர் சை யை கிளப்பியது. பப்லூவின் இரண்டாவது மனைவி ருக்மணி ஷீத்தல் மலேசியாவைச் சேர்ந்தவர்.

ஒரு நிகழ்ச்சிக்காக அவர் மலேசியா சென்றிருந்தபோது ஒருவரையொருவர் சந்தித்து பேசியுள்ளனர். அவர்களிடையே ஏற்பட்ட காதலுக்குப் பிறகு, இருவரும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.பலர் தங்கள் திருமணத்தின் மீது அதிருப்தியையும் வெறுப்பையும் வெளிப்படுத்திய நேரத்தில், அதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றே கூறவேண்டும். ஷீத்தல் தனக்கு நல்ல மனைவியாக இருக்கிறார் என்றும், தனது முதல் மனைவி தனக்கு ஏற்படுத்தி சென்ற காயங்களை இவர் ஆற்றுகிறார் என்றும் பல சமயங்களில் பப்லு கூறியது அனைவரும் அறிந்ததே.

இருவரும் தங்கள் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்த நிலையில், அவ்வப்பொழுது ஒன்றாக எடுக்கும் பல வீடியோக்களை பகிர்ந்து இணையத்தில் பல வரவேற்புகளையும் பெற்று வந்தனர்.இந்நிலையில் தான் தற்பொழுது அந்த ஜோடி பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்றாலும், இருவரும் தங்கள் சமூக ஊடக கணக்கில் இருந்து தங்கள் இருவரும் ஒன்றாக இருந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அகற்றியுள்ளனர்.

அது போல ஷீத்தலின் சமூக வளைதள பக்கத்தில், இணையதளவாசியொருவர் ஒருவர் நீங்கள் பிரிந்து விட்டீர்களா என்று கமெண்டில் கேட்க, அதற்கு ஷீத்தல் அந்த கம்மெண்ட்டை லைக் செய்துள்ளதுள்ளார்.

ஆகையால் அவர்கள் இருவரும் பிரிந்தது உண்மை தான் என்ற முடிவுக்கு தற்போது இணையவாசிகள் வந்துள்ளார்கள். குறித்த விடயம் தற்போது இணையத்தில் புதிய புயலை கிளப்பி வருகின்றது.

 

 

View this post on Instagram

 

A post shared by Babloo Prithiveeraj (@prithiveeraj)

Leave A Reply

Your email address will not be published.