நடிச்சு போரடிச்சி போச்சா!! கணவருக்கு வேட்டு வைக்க நயன் போட்ட புது ரூட்டு..!

0

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து தற்போது பாலிவுட் வரை சென்றுள்ள நடிகை நயன் தாரா ஜவான் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்த நயன், இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிப்பு, பிசினஸ் என்று பிஸியாக இருந்து போரடித்து போனதால் கணவரை போல் இயக்கத்தில் இறங்கவிருக்கிறாராம்.

இணையத்தில் தற்போது ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பகிர்ந்து வரும் நடிகை நயன் தாரா, அவரது இன்ஸ்டா பக்கத்தில் கேமரா வியூ பாயிண்ட்டில் பார்க்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதோடு நியூ பிகினிங்ஸ் என்ற பதிவோடு போட்டுள்ளதால் இயக்கத்திற்கு தாவ இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

டெஸ்ட், அன்னப்பூரணி படத்தில் நடித்து முடித்ததும் இயக்கத்தில் இறங்கவார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.