திரை நாயகி திரிஷாவே… என்னை மன்னித்துவிடு! மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்..!

0

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் அவரிடம் மன்னிப்பு கேட்டதோடு அவருடைய திருமணத்தில் கலந்து கொண்டு அவரை ஆசீர்வதிக்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் பேசிய போது த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலான நிலையில் த்ரிஷா இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

மேலும் தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்ததோடு த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியது

ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மன்சூர் அலிகான் கூறியிருந்த நிலையில் அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் அவர் முன் ஜாமீன் தாக்கல் செய்த நிலையில் அந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் திடீரென மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. அவர் தனது மன்னிப்பு செய்தியில் கூறியிருப்பதாவது:

எனது சக திரை நாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம் வரும்போது நான் ஆசீர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன். ” —மன்சூர் அலிகான் .

Leave A Reply

Your email address will not be published.