படுத்த படுக்கையாக இருக்கும் சூர்யா வெளியிட்ட பதிவு.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

0

கங்குவா படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்துள்ள நடிகர் சூர்யா ரசிகர்களுக்காக பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.நடிகர் சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் சூர்யா.தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் கோலிவுட்டில் இவருக்கென தனி ரசிக பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.சூர்யா நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் கங்குவா.

இந்த திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர்.

நேற்று நள்ளிரவு இந்த விபத்து ஏற்பட்டதால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.வெளியிட்ட அப்பேட்
சூர்யாவின் காட்சிகள் முழுவதும் முடிவடைய இருந்த நிலையில்

விபத்தால் தற்போது படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது என படக்குழுவினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது சூர்யாவின் உடல் நிலை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.அதாவது, “ சிறிய காயமடைந்துள்ள நான் தற்போது நலமுடன் இருக்கிறேன். குறுஞ்செய்திகளுக்கு மனமார்ந்த நன்றி..” என பதிவிட்டுள்ளார்.இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

 

Leave A Reply

Your email address will not be published.