விபத்தில் சிக்கிய நடிகர் சூர்யா ! மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

0

நடிகர் சூர்யா விபத்தில் சிக்கி காயமடைந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நடிகர் சூர்யா
தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தில் நடித்து வரும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் சூர்யா பலத்த காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் சிவா, ‘அண்ணாத்த’ படத்திற்கு பின்னர் நடிகர் சூர்யாவை வைத்து இயக்கும் திரைப்படம் ‘கங்குவா’. இந்த படத்தில் சூர்யா ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகினறனர்.

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா படத்தில் தற்போது சூர்யா நடித்து வருகிறார். ஃபேண்டஸி கதையம்சம் கொண்ட இந்த படம், 3டி டெக்னாலஜியுடன் மிகப்பெரிய பொருள் செலவில் உருவாகி வருகிறது.இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் சுமார், 350 கோடி பட்ஜெட்டில், 10 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் சூர்யா நடித்து வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு, பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் இடம்பெற்று வந்தது.இந்நிலையில் சண்டை காட்சி படப்பிடிப்பு இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, ரோப் கேமரா அறுந்து விழுந்த நிலையில், சூர்யாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இவர், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த விடயம் திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.