நடிகர் மாரிமுத்து இறப்பதற்கு முன் ரீல் மகளுக்கு அனுப்பிய வீடியோ- கண்கலங்க வைத்த வரிகள்!

0

நடிகர் மாரிமுத்து இறப்பதற்கு முன் ரீல் மகள் மோனிசாவிற்கு அனுப்பிய வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.மாரிமுத்து
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமாகியவர் தான் நடிகர் மாரிமுத்து.இவர் தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக அங்கிகாரம் கிடைக்காமல் போராடினாலும் சின்னத்திரையில் கொஞ்ச நாட்களாக மிரள விட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து சமிபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.டப்பிங் பணியை முடித்து விட்டு வெளியில் கிளம்பும் போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

கண்கலங்க வைத்த சில வரிகள்
இந்த நிலையில் மாரிமுத்து இறப்பதற்கு முன்னர் ரீல் மகள் மோனிசாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி ஒரு வீடியோக்காட்சி அனுப்பியுள்ளார்.

இந்த காட்சியை நடிகை மோனிசா தற்போது அவரின் சமூக வலைத்தளங்களில் கவலையுடன் பகிர்ந்துள்ளார். மோனிசாவிற்கு பிறந்த நாள் என நினைத்து குறித்த காட்சியை அனுப்பியுள்ளார்.அப்போது பிறந்த நாள் இல்லாத காரணத்தால் அட்வான்ஸாக வைத்து கொள்ளுங்கள் என கூறியிருக்கிறார்.

இன்றைய தினம் பிறந்த நாள் கொண்டாடும் மோனிசாவிற்கு வாழ்த்துக்கள் கூறுவதற்கு மாரிமுத்து உயிருடன் இல்லை.இதனையே பதிவில் உறுக்கமாக பேசியுள்ளார். இந்த காட்சியை பார்க்கும் போது இணையவாசியான நமக்கே கண்ணீர் வருகின்றது.

 

Leave A Reply

Your email address will not be published.