மன்சூர் அலி கான் மனித குலத்திற்கே அவமானம்.. அருவருப்பான பேச்சுக்கு கொந்தளித்த த்ரிஷா..!

0

மன்சூர் அலி கான்
வில்லன் நடிகர் மன்சூர் அலி கான் சமீபத்தில் த்ரிஷா பற்றி பேசி இருந்தது பெரிய சர்ச்சை ஆனது.”த்ரிஷா உடன் நடிக்கிறேன் என்றதும், நிச்சயமாக ஒரு பெட்ரூம் சீன் இருக்கும், குஷ்புவை மாதிரி கட்டிலில் தூக்கி போடலாம் என நினைத்தேன். 150 படத்தில் நான் பண்ணாத அட்டூழியமா. ஆனா காஷ்மீர்ல த்ரிஷாவை கண்ணுலயே காட்ட மாட்டேங்குறாங்க” என மன்சூர் பேசி இருந்தார்.

கொந்தளித்த த்ரிஷா.. ட்வீட்
தற்போது மன்சூர் பேச்சை கேட்டு த்ரிஷா கடும் கோபத்துடன் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

“மன்சூர் அலி கான் பேசிய ஒரு வீடியோ என் கவனத்திற்கு வந்தது. அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அது மிகவும் sexist, அவமரியாதையான, பெண்களுக்கு எதிரான, அருவருப்பான, மோசமான ஒரு பேச்சு.”

“இவரை போன்ற மோசமான ஒருவருடன் நான் இதுவரை நடித்ததில்லை. இனிமேலும் அது என் கேரியரில் நடக்காமல் பார்த்துக்கொள்வேன். இவரை போன்றவர்கள் மனித குலத்திற்கே அவமானம்” என த்ரிஷா பதிவிட்டு இருக்கிறார்.

 

Leave A Reply

Your email address will not be published.