ஜோவிகாவின்‌ சிறு வயது புகைப்படங்களை பகிர்ந்த வனிதா விஜயகுமார் வைரல் புகைப்படம் இதோ!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே கல்வி குறித்து தன்னுடைய தற்குறித்தனமான பேச்சினால் கெட்ட பெயரை சம்பாதித்திருக்கிறார் ஜோவிகா என்று தான் கூற வேண்டும்.பிரபல நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமாரின் மகள் தான் ஜோவிகா என்பது குறிப்பிடத்தக்கது. இது இணைய வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளானது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கக்கூடிய விஷயங்கள் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் மட்டுமே விவாதிக்கப்படும் ஒன்றாக இருக்கும். ஆனால், சில விஷயங்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டை தாண்டி ஒட்டுமொத்த சமூகமும் சேர்ந்து விவாதிக்க கூடிய அளவுக்கு செல்லும்.

அந்த வகையில் ஜோவிகாவின் கல்வி குறித்தான விவாதம் அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டது. அது எப்படி 20 வயது ஆன ஒரு பெண் கல்வி முக்கியம் கிடையாது என்று கூறுகிறார்.. கல்விக்காக அவரவர்கள் எவ்வளவோ போராடிக் கொண்டிருக்கும் பொழுது பணக்கார பெண்ணாக இருந்து கொண்டு இவர் இப்படி எல்லாம் கூறுவது சரி கிடையாது.இது இந்த நிகழ்ச்சியை பார்க்கும் குழந்தைகளை தவறாக வழிநடத்தி விடும் என்று தங்களுடைய ஆதங்கத்தை பதிவு செய்து வந்தனர். இந்நிலையில், இப்படி அசிங்கப்பட்டு நிற்கும் தன்னுடைய மகளுக்கு ஆதரவாக அவருடைய தந்தை ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோவை, தன்னுடைய முன்னாள் மனைவி வனிதா விஜயகுமாருக்குர் அனுப்பி இருக்கிறார் அவருடைய தந்தை. அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் வனிதா விஜயகுமார்.அவர் கூறியிருப்பதாவது, “ஜோவிகாவின் தந்தை இந்த வீடியோவை எனக்கு அனுப்பி பதிவேற்றம் செய்ய சொன்னார். பெற்றோர்களுக்கு மட்டுமே அவர்களுடைய சிறப்பான விஷயங்கள் தெரியும். உங்களுடைய குழந்தைகள் எப்படி உங்களுக்கு சிறப்பாக இருக்கிறார்களோ அதே போலத்தான் எங்களுக்கும்..” என்று பதிவு செய்து ஜோதிகாவின் தந்தை அனுப்பியதாக கூறிய வீடியோவையும் பதிவு செய்திருக்கிறார் வனிதா விஜயகுமார்.

இதில் தான் கைப்பட எழுதிய கவிதை ஒன்றை வாசிக்கிறார் ஜோவிகா. மிகவும் ஆழ்ந்த கருத்துள்ள இந்த கவிதை ரசிகர்களை கவர்ந்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.இப்படி இருக்கக்கூடிய ஜோவிகா வயதில் பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ஒரு கோடி பேர் பார்க்கக்கூடிய ஒரு நிகழ்ச்சியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாமல் இறுமாப்புடன் பேசுவது.

. மற்றவர்களை கோபப்படுத்தும் விதமாக நடந்து கொள்வது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்ற நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.