பைக் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய தனுஷ் மகன்.. போலீஸ் அதிரடி நடவடிக்கை..!
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். அவர் ரஜினியின் மகன் ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்த நிலையில், அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.18 வருடம் இணைந்து வாழ்ந்த நிலையில் கடந்த வருடம் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்தனர். ஆனால் இன்னும் சட்டப்படி அவர்கள் விவாகரத்து பெறவில்லை என கூறப்படுகிறது.
தனுஷ் மகனுக்கு அபராதம்
இந்நிலையில் தனுஷின் மூத்த மகன் யாத்ரா இன்னும் 18 வயதை தொடாத
நிலையில் சாலையில் R15 பைக்கை ஓட்டி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இது சர்ச்சை ஆனது.
தற்போது போலீசார் தனுஷ் வீட்டுக்கு சென்ற போக்குவரத்து போலீசார், யாத்ராவுக்கு 1000 ருபாய் அபராதம் விதித்து இருக்கின்றனர்.