நீங்கெல்லாம் உடையை பற்றி பேசலாமா..?? மட்டமாக பேசி சர்ச்சையில் சிக்கிய விசித்ரா..!! பழைய புகைப்படத்தை பகிர்ந்து கழுவி ஊத்தும் ரசிகர்கள் ..!
கடந்த சில தினங்களுக்கு முன்பு பிக் பாஸ் சீசன் 7 கோலாகலமாக தொடங்கப்பட்டது . இந்த நிகழ்ச்சியையும் உலகநாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இந்த சீசன் தொடங்கி இரண்டு நாட்களிலேயே மாறி மாறி சர்ச்சையை கிளப்பி வருகின்றனர் போட்டியாளர்கள் . அந்த வகையில் தேவையில்லாமல் பேசி தற்போது ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகியுள்ளார் நடிகை விசித்ரா.
தமிழில் வெளியான போர் கொடி என்ற படத்தின் மூலம் அறிமுகமான விசித்ரா தொடர்ந்து தேவர் மகன் ,அமராவதி, அமைதிப்படை ,முத்து, வில்லாதி வில்லன் போன்ற பல திரைப்படங்களில் கவர்ச்சி நடிகை நடித்திருந்தார் . இப்படி இருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில்,
போட்டியாளராக கலந்து கொண்ட விசித்திரா சக போட்டியாளர்களான ரவீனா மற்றும் ஐசு உடை அணியும் விதம் சரியில்லை என்று நாமினேட் செய்திருந்தார் . அதோடு வீட்டில் சின்ன வயசு பசங்களும் இருக்காங்க, பெரியவங்களும் இருக்காங்க அதனால் உடை விஷயத்தில்,
அவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார் நடிகை விசித்ரா . தற்போது இதுதான் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது.
அந்த வகையில் ஒரு காலகட்டத்தில் அறையும் குறையுமாக நடித்து வந்த இவரெல்லாம் உடையை பற்றி பேசலாமா என்று பலரும்,
நடிகை விசித்ராவை வறுத்தெடுத்து வருகின்றனர் . இப்படி பிக் பாஸ் ஆரம்பித்த சில நாட்களிலேயே ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்ததால் விசித்ரா விரைவில் வெளியேறுவார் என்றும் கூறப்படுகிறது…