நடிகை ஸ்ரீதேவியின் தங்கையா இவர்..? அச்சு அசலாக அவரைப் போலவே என்ன அழகு பாருங்க..!

0

பிரபல நடிகையும், மயில் என தமிழர்களால் கொண்டாடப்பட்டவருமான நடிகை ஸ்ரீதேவி, தன்தங்கையோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.தமிழ்த்திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம்வந்தவர் நடிகை ஸ்ரீதேவி.; ரஜினி, கமல் என அன்றைய முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். தயாரிப்பாளர்கள் ஸ்ரீதேவியிடம் கால்ஷிட் வாங்கிவிட்டுத்தான் படத்துக்கே பூஜை போடும் சூழல் இருந்தது. பதினாறு வயதிலே திரைப்படத்தில் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது.

கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்குப் போன நடிகை ஸ்ரீதேவி அங்கும் வெற்றிக்கொடி நாட்டினார். அந்தவகையில் அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்றே சொல்லலாம்.ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். அஜித் நடித்த நேர்கொண்டபார்வையின் தயாரிப்பாளர் இவர்தான். ஸ்ரீதேவி கடந்த ஆண்டு வெளிநாடு போயிருந்தபோது பாத்ரூமில் வழுக்கி விழுந்து உயிர் இழந்தார். இந்ததம்பதிக்கு ஜானவி, குஷி என இருமகள்கள் உள்ளனர்.

இதில் மூத்தமகளான ஜானவி இப்போது பாலிவுட்டில் நாயகியாக நடித்து வருகிறார், ஸ்ரீதேவி இறந்து ஓராண்டு ஆகும்நிலையில் இப்போது ஸ்ரீதேவிக்கு, ஸ்ரீலதா என்ற தங்கை இருப்பதாகவும் அவர்கள் இருவருக்குள்ளும் பேச்சு இல்லை எனவும் கூறப்படுகிறது.

ஸ்ரீதேவியை போலவே சினிமா நடிகையாக ஆசைப்பட்டாராம் ஸ்ரீலதா. அவரும், சில படங்களில் தலைகாட்டினாலும் பெரிதாக எதுவும் போகவில்லை. இதனால் சினிமா ஆசைக்கு முழுக்கு போட்டுவிட்டு துபாயில் திருமணம் முடிந்து கணவரோடு இருக்கிறார்.

அக்கா, தங்கைக்கு இடையே சொத்துப் பிரச்னை இருந்ததால் இருவரும் வெகுகாலம் பேசாமலே இருந்தார்களாம். இப்போது ஸ்ரீதேவி தன் தங்கையோடு இருக்கும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.