தனது மனைவி ஜோதிகாவிற்கு நன்றி கூறியுள்ள நடிகர் சூர்யா- வைரல் பதிவு..!
சூர்யா-ஜோதிகா
நட்சத்திர பிரபலங்களில் ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்ட ஜோடி சூர்யா-ஜோதிகா. இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் இணைய வேண்டும் என அனைவருமே விரும்பினார்கள்.சூர்யா-ஜோதிகா படு கோலாகலமாக கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்தனர், இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர்.
தற்போது சூர்யா குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகியுள்ளார், ஆனால் தமிழ் சினிமாவில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்துகொண்டு வருகிறார்.
சூர்யா நடிப்பில் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் கங்குவா படம் வெளியாக இருக்கிறது, ஜோதிகா மம்முட்டியுடன் இணைந்து நடித்துள் காதல் திரைப்படம் அடுத்து வெளியாக உள்ளது.
சூர்யா பதிவு
தீபாவளி ஸ்பெஷலாக பிரபலங்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட நடிகர் சூர்யாவும் மனைவி ஜோதிகாவுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் வாழ்க்கையை எப்படி கொண்டாடுவது என எங்களுக்கு காட்டியதற்கு நன்றி பொண்டாட்டி எனப் பதிவிட்டுள்ளார். சூர்யாவின் இந்த பதிவிற்கு ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவிந்து வருகிறது.
View this post on Instagram