நிச்சயத்திற்கே இப்படியா?தங்க தட்டில் சாப்பாடு, மாணிக்க மோதிரம்- மாஸ் காட்டும் தம்பி ராமையா..!

0

தங்க தட்டில் சாப்பாடு, மாணிக்க மோதிரம் என மகனின் நிச்சயத்தை தம்பி ராமையா அசத்தி விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.தம்பி ராமையா
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் தம்பி ராமையா.இவர் நடிப்பில் ஏகப்பட்ட திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும் கும்பி, மைனா ஆகிய திரைப்படங்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படுகின்றது.

யதார்த்தமாக கதையம்சத்திற்கு ஏற்ப தன்னை மாற்றி நடிப்பதில் தேர்ச்சி பெற்றவராக தம்பி ராமையாக பார்க்கப்படுகின்றார்.இந்த நிலையில் இவரின் ஒரே மகன் உமாபதி ஆக்ஷன் கிங் அர்ஜீனின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து வருகிறார் என தகவல் வெளியாகியது.

தங்க தட்டா?
இதனை தொடர்ந்து இருவீட்டாரும் பேசுகிறார்கள் என தகவல் வெளியாகியது. தற்போது இருவருக்கும் நிச்சியமே முடிந்து விட்டது. ஆனால் இவர்கள் இருவரும் இளைஞர்கள் என்பதால் தம்பி ராமையா மருமகளுக்கு பல கண்டிஷன்களையும் போட்டுள்ளார்.மேலும் நிச்சியத்திற்கு வந்தவர்களுக்கு தங்க தட்டில் சாப்பாடு பல மாநிலங்களை சேர்ந்த சிறப்பான டிஷ்களை கொடுத்துள்ளார்.

பின்னர் தன்னுடைய ஆசை மருமகளுக்கு பர்மாவில் இருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட 5 காரட் மாணிக்க மோதிரத்தைத் தான் போட்டுள்ளார்.இவர்களின் ஆடைகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு அனைத்தும் லைட் பிங்கில் அடிக்காத கலராக அசத்தலாக உருவாக்கப்பட்டு எனவும் கூறப்படுகின்றது.

இவைகளை பார்த்த இணையவாசிகள்,“ அப்போ திருமணம் எதிர் பார்க்கவே தேவையில்லை…” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.