விவேக் போட்ட விதை ..!! அவர் இறந்த பிறகும் செயல்படுத்தி வரும் செல் முருகன் ..!! நண்பன்னா இப்படி இருக்கணும் ..!

0

தமிழ் சினிமா உலகில் ஒரு தவிர்க்க முடியாத காமெடி நடிகராக கலக்கிக் கொண்டு வந்தவர் தான் மறைந்த நடிகர் விவேக் அவர்கள் . மக்களுக்கு தெரியாத பல விஷயங்களை தன்னுடைய காமெடி காட்சிகள் மூலம் விழிப்புணர்வு செய்து வந்தார் நடிகர் விவேக் . இதனாலேயே ஜனங்களின் கலைஞன் என்று அழைக்கப்பட்டார் நடிகர் விவேக் . அது மட்டுமல்லாமல் அப்துல்கலாம் சொன்னார் என்ற,

ஒரே காரணத்திற்காக பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்து வந்தார் விவேக். ஆனால் திடீரென அவர் இறந்து விட்டார். இவருடைய இறப்பை யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை . இப்படி இருக்கும் நிலையில் ஆரம்பத்தில் இருந்தே நடிகர் விவேக் உடன் நடித்து வந்தவர் தான் ,

நடிகர் செல் முருகன். விவேக் நடித்த பாதி படங்களில் இவர் கண்டிப்பாக இடம் பெறுவார் . அதுமட்டுமல்லாமல் விவேக்குக்கு ஒரு நல்ல நண்பராகவும் இருந்து வந்தார் நடிகர் செல் முருகன்.

இந்நிலையில் விவேக் இறந்த பிறகு அவர் செய்த அதே பணியை தொடர்ந்து ,வருகிறாராம் நடிகர் செல் முருகன் . அந்த வகையில் இவரும் தற்போது பல மரக்கன்றுகளை நெட்டு வைத்து வருகிறார் .

அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…

Leave A Reply

Your email address will not be published.