அம்மா என்ன நினைச்சு கவலப்பட வேணாமான்னு லெட்டர் எழுதிவச்சிட்டு போனாரு – மாரிமுத்துவை நினைத்து உருகும் உறவினர்கள்..!

0

எதிர் நீச்சல் தொடர் நடிகர் மாரிமுத்து இறப்பு குறித்து இயக்குனர் திருச்செல்வம் பேசி இருக்கும் ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் தொடரில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் மாரிமுத்து. தேனி மாவட்டம் பசுமலையை சேர்ந்த இவர் கவிஞர் வைரமுத்துவின் உதவியாளராக இருந்தவர் மேலும் தமிழ் சினிமாவில் ராஜ்கிரன் மணிரத்தினம் சீமான் எஸ் ஜே சூர்யா போன்ற பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

தமிழில் இவர் கண்ணும் கண்ணும், புலிவால், மருது, கடைக்குட்டி சிங்கம், போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் நடித்த பரியேறும் பெருமாள் படத்தின் படத்தில் நாயகியின் தந்தையாக ஒரு கொடூரமான ஜாதி வெறி பிடித்த ஒரு நபராக தனது சிறப்பான நடிப்பை காட்டி இருப்பார். இறுதியாக இவர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் வில்லன் கேங்கில் ஒரு முக்கிய நபராக நடித்து இருந்தார்.

திடீர் மரணம் :
இப்படி ஒரு நிலையில் இன்று காலை மாரடைப்பு காரணமாக மாரிமுத்து திடீர் மரணமடைந்தார். டப்பிங் பேசிக்கொண்டு இருக்கும் போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் உடனே அவரை மறுமுதவமனைக்கு அழைத்த செல்லப்பட்ட போது போகும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இன்று மாலை அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலை கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

மறைந்த நடிகர் மாரிமுத்து தேனி மாவட்டத்தில் உள்ள பசுமை மலைத்தேரி என்ற கிராமத்தை சேர்ந்தவர். இவரது இழப்பானது ஊர் மக்களே மிகவும் சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் குமாரசாமி மாரியம்மாள் தம்பதிக்கு ஐந்தாவது மகனாக பிறந்தார். இவர் மயிலாடும்பாறையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து முடித்தார். படிப்பு கெட்டிக்காரரான இவர் பள்ளி முடித்த உடனே பாலிடெக்னிக்கை சேர்ந்தார்.

அந்த காலகட்டத்தில் கவிஞர் வைரமுத்து மீது கற்றுக் கொண்டு இருந்தார். இவர் எப்போதும் புத்தகங்களை வாசித்துக் கொண்டே இருப்பார் மற்றும் நன்றாக பேசக்கூடியவராகவும் இருந்து வந்தார்.கல்லூரி முடித்தவுடன் வீட்டிலிருந்தால் தன்னை வேலைக்கு போக சொல்வார்கள் என்று அங்கு இருந்து கரி கட்டு எடுத்து சுவற்றில் நான் சென்னைக்கு கிளம்புகிறேன் என்று சென்னைக்கு புறப்பட்டு வந்தார். என்னை யாரும் தேட வேண்டாம் சினிமாவில் ஜெயித்தால் மட்டுமே நான் திரும்பி வருவேன் இல்லை என்றால் கடலில் மூழ்கியிருப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.