முதல் சந்திப்பிலேயே ஃபிளாட் ஆகிய விக்கி!.. அப்படி என்ன நடந்துச்சி தெரியுமா?

0

முதல் சந்திப்பில் நயன்தாரா- விக்னேஷ் இருவருக்கும் இடையில் என்ன நடந்தது என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.நயன் – விக்கி
தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதல் இடத்தில் இருப்பவர் தான் நடிகை நயன்தாரா.இவர் நடிப்பில் கடைசியாக ஜவான் திரைப்படம் வெளியாகி அட்லிக்கு பாரிய வெற்றியை கொடுத்தது.இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரின் காதல் நானும் ரவுடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியபோது ஆரம்பமாகியுள்ளது.

தற்போது இருவருக்கும் திருமணம் நடந்து அழகிய இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்.இதன்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் சமிபத்தில் எங்களுக்குள் எப்படி காதல் மலர்ந்தது? என கதையை ரசிகர்களுக்காக கூறியுள்ளார்.

முதல் நாள் என்ன நடந்தது?
அதில், “ நானும் ரவுடி தான் படத்திற்கு தயாரிப்பாளராக தனுஷ் சார் தான் இருந்தார்.அவர் தான் நயன்தாராவை பார்த்து கதை கூறுமாறு அனுப்பினார்.

உள்ளே சென்றதும் அவர் என்னை அமர கூறி விட்டு அவரின் செல்லை ஆப் செய்து விட்டார்.இதுவே எனக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது.

படம் எடுக்கும் போது எனக்கும் அவருக்கும் அடிக்கடி சின்ன சின்ன சண்டை வந்தது. அது கொஞ்சம் நேரத்தில் சரியாகி விடும். இதுவே பெரிய புரிதல்..” என அவரின் காதலை அழகாக கூறியுள்ளார்.இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் நயனின் இது போன்ற நல்ல செயல் தான் அவரை உச்சத்தில் வைத்திருக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.