இந்த புகைப்படத்தில் இருக்கும் தென்னிந்திய முன்னணி நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க..!
வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். இந்த புகைப்படத்தில் இருக்கும் நட்சத்திரம் யார் என கேட்டு ரசிகர்கள் கேள்வி எழுப்புவார்கள்.அந்த வகையில் தற்போது தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவரின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது.
இவர் தனது சிறு வயதிலேயே தமிழில் வெளிவந்த சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட மலையாளத்தில் தான் கதாநாயகியாக அறிமுகமானார்.
இவருக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று நடனம். பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
மலையாளத்தில் நாயகியாக அறிமுகமான இவர் தமிழில் தனுஷ், சூர்யா தற்போது சிவகார்த்திகேயன் என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களிலும், சோலோ ஹீரோயினாகவும் கலக்கி வருகிறார்.
அட இவரா
அவர் வேறு யாருமில்லை நடிகை சாய் பல்லவி தான். ஆம், நடிகை சாய் பல்லவியின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.