தாத்தா முன்பு அவரது வசனத்தை பேசி அசத்திய செந்திலின் பேத்தி! இணையத்தில் வைரலாகும் காட்சி..!

0

நடிகர் செந்திலின் பேத்தி அவரது வசனத்தினை அவரைப்போன்றே நடித்துக் காட்டியுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.கொமடி நடிகர் செந்தில்தமிழ் சினிமா உலகில் காமெடி என்றால் முதலில் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது கவுண்டமணி– செந்தில் காம்போ தான். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காமெடி படங்கள் எல்லாம் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

காலங்கள் மாற மாற இவர்களுடைய பயணமும் மாறிவிட்ட நிலையில், இன்றும் ரசிகர்கள் கொண்டாடி வரும் கொமடியை அடித்துக் கொள்ள இன்னும் வரவில்லை என்றே கூற வேண்டும்.தாத்தா முன்பு அவரது வசனத்தை பேசி அசத்திய செந்திலின் பேத்தி! இணையத்தில் வைரலாகும் காட்சி


செந்திலின் குடும்பம் பின் 1984 ஆம் ஆண்டு நடிகர் செந்தில் அவர்கள் கலைச் செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டதுடன், இந்த தம்பதிகளுக்கு மணிகண்ட பிரபு, ஹேமசந்திர பிரபு என்ற மகன்கள் உள்ளார்கள். இதில் ஹேமசந்திர பிரவு சினிமாட்டோகிராபி படித்துள்ளார்.

இவருடைய மூத்த மகன் மணிகண்ட பிரபு ஒரு பல் மருத்துவராக உள்ள நிலையில், தனியாக மருத்துவமனை வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் செந்திலின் மகன் மணிகண்ட பிரபு ‘உன்னை எனக்கு பிடிச்சிருக்கு’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிய நிலையில், குறித்த படம் பாதியிலேயே நின்றுவிட்டது.

மணிகண்ட பிரபுவிற்கு மதுரை டாக்டர் ஜனனி உமையாள் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மிருதி என்ற பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் செந்திலின் பேத்தி மிருதி அவர் முன்பே அவரது வசனத்தை ரீல்ஸ் செய்து அசத்தியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.