தடபுடலாக திருமணத்திற்கு தயாராகிய ஸ்ரீதிவ்யா: மாப்பிள்ளை யார் தெரியுமா?

0

நடிகை ஸ்ரீதிவ்யாவிற்கு விரைவில் திருமணம் என்றும் மாப்பிள்ளை தொடர்பான விபரங்களும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.நடிகை ஸ்ரீ திவ்யா
தமிழ் சினிமாவில் “ வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை ஸ்ரீ திவ்யா.இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு முன்னர் கடந்த 2010 ஆம் ஆண்டு தெலுங்கு படத்தில் நடித்து கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து விஷ்ணு விஷாலுடன் ஜீவா, விக்ரம் பிரபுவுடன் வெள்ளக்கார துறை , இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் காக்கி சட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக 2017 ஆம் ஆண்டு ஜீவாவுடன் சங்கிலி புங்கிலி கதவ திற என்ற திரைப்படத்தில் நடித்தார்.இந்த திரைப்படத்திற்கு பின்னர் நடிகை ஸ்ரீதிவ்யாவை ஒரு திரைப்படத்திலும் காண முடியவில்லை.இந்த நிலையில், கம் பேக் கொடுக்கும் விதமாக, தமிழில் ரெய்டு என்னும் படத்தில் நடித்திருக்கிறார்.

சினிமாவில் உடம்பை காட்டி வாய்ப்பு தேடும் நடிகர்கள் இருக்கும் போது நடிகை ஸ்ரீ திவ்யா, கவர்ச்சியான வேடங்களில் நடிக்காமலேயே ரசிகர்களை கவர்ந்து விட்டார்.இப்படியொரு நிலையில், சமூக வலைத்தளங்களில் சமிபக்காலமாக ஸ்ரீதிவ்யா ஆக்டிவாக இருந்து வருகிறார்.அந்த வகையில் சமிபத்தில் நேர்காணலில் கலந்துகொண்ட ஸ்ரீ திவ்யாவிடம் திருமணம் குறித்து கேள்வியெழுப்பியுள்ளனர்.

அதற்கு பதில் கொடுத்த ஸ்ரீதிவ்யா,“ என்னுடைய திருமணம் கண்டிப்பாக காதல் திருமணமாக தான் இருக்கும். என்னுடைய காதலரை தான் திருமணம் செய்ய போகிறேன்..” என பதிலளித்துள்ளதாக கூறப்படுகின்றது.இந்த செய்தி கேட்ட அவரின் ரசிகர்கள் காதலர் யாராக இருக்கும் என வலைவீசி தேடி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.