மாடர்ன் உடையில் தெறிக்கவிடும் ரம்பா… 47 வயதிலும் புகைப்படத்தை பாருங்க..!

0

நடிகை ரம்பா 47 வயதில் மாடர்ன் உடையில் காணப்படும் புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.நடிகை ரம்பா
நடிகை ரம்பா உள்ளத்தை அள்ளித் தா படத்தின் மூலம் தமிழில் திரையுலகிற்கு அறிமுகமாக 90களில் கனவுகன்னியாக வலம் வந்தவர். தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை தனது க்யூட் நடிப்பால் உருவாக்கினார்.

2010ம் ஆண்டு இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு நீதிமன்றம் வரை சென்றவர்கள், மகன் பிறந்த பின்பு மீண்டும் திரும்ப சேர்ந்து வாழ விரும்பிய நிலையில் வழக்கு திரும்பப் பெறப்பட்டது.

மாடர்ன் உடையில் ரம்பா
லாவன்யா, சாஷா என்ற மகள்களும், ஷிவின் என்ற மகனுடன் மகிழ்ச்சியாக இருந்து வரும் ரம்பா, தனது குடும்ப புகைப்படத்தினை அவ்வப்போது பதிவிட்டு வருகின்றார்.

தற்போது மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் 47 வயதிலும் கொள்ளை அழகில் மாடர்ன் உடையில் ஜொலிக்கிறாரே என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.