5 வருடமாக படுத்த படுக்கையிலேயே கிடக்கும் இயக்குனர் விக்ரமன் மனைவி, என்ன ஆச்சு- பதற வைக்கும் விஷயம்..!

0

இயக்குனர் விக்ரமன்
குடும்பங்கள் கொண்டாடும் படங்கள், ஃபீல் குட் மூவிஸ் இயக்கி தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியவர் இயக்குனர் விக்ரமன்.புதிய பாதை படத்தில் பார்த்திபனுக்கு உதவி இயக்குனராக இருந்து பின் புது வசந்தம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவரின் முதல் படமே தமிழக அரசின் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்திற்கான இரண்டு விருதை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து, பெரும்புள்ளி கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம், பூவே உனக்காக சூர்ய வம்சம், உன்னை நினைத்து, வனத்தைப்போல உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கினார்.

பூவே உனக்காக விஜய்யின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம், சரத்குமாரின் சூர்யவம்சம் படம் குறித்து சொல்லவே தேவையில்லை, 200 நாட்களுக்கு மேல் ஓடியது.

இவர் கடைசியாக கடந்த 2014ம் ஆண்டு வெளியான ‘நினைத்தது யாரோ’ என்கிற படத்தை தான் இயக்கியுள்ளார், அதன்பிறகு படமே இயக்கவில்லை.குடும்பம்
இயக்குனர் விக்ரமனின் மனைவி ஜெயப்ரியா ஒரு குச்சிப்புடி நடன கலைஞராம், சுமார் 4000 மேடைகளில் ஆடியவர்.

உடலில் ஏற்பட்ட பிரச்சனைக்காக சிகிச்சை மேற்கொண்ட போது சிகிச்சை தவறாக போக அதன்காரணமாக சுமார் 5 வருடங்களாக படுத்த படுக்கையாக இருக்கிறாராம்.

இப்போது அவர் கிட்னி பிரச்சனையாலும் பாதிக்கப்பட்டு வருகிறாராம்.மனைவியை கூட இருந்து பார்த்துக் கொள்ளவே படங்கள் எதுவும் இயக்குவதில்லையாம் விக்ரமன்.

Leave A Reply

Your email address will not be published.