கோவிலில் நடைபெற்ற அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா – உமாபதி நிச்சயதார்த்தம் : ரசிகர்கள் கொண்டாட்டம்..!

0

தமிழ் சினிமாவில் ஆக்ஷனில் மிரட்டி ரசிகர்கள் மத்தியில் ஆக்ஷன் சிங் என்று அழைக்கப்பட்டுவரும் நடிகர் தான் அர்ஜுன். இவர் பல படங்களில் நடித்து வரும் இவர் தற்போது குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.இறுதியாக லியோ படத்தில் அர்ஜுன் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது மூத்தமகள் ஐஸ்வர்யாவிற்கும், தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது.

ஐஸ்வர்யா – உமாபதி நிச்சயதார்த்தம்
அர்ஜுன் தொகுத்து வழங்கிய, ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் தம்பி ராமய்யா மகன் உமாபதிக்கும், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கு இடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது.

இதை தொடர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் எதிர்வரும் தை மாதம் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளதாக,சமீபத்தில் தம்பி ராமையா தெரிவித்திருந்தார்.இதனையடுத்து இவர்கள் இருவரின், திருமண நிச்சயதார்த்தம் விரைவில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற உள்ளதாக , தகவல் வெளியானது.

இதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருவதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து, அர்ஜுன் சென்னையில் கட்டியுள்ள ஆஞ்சிநேயர் கோவிலில் மிகவும் எளிமையாக இவர்கள் இருவரின் திருமண நிச்சயதார்த்தம் இன்று நடந்து முடிந்துள்ளது.

இருவீட்டு குடும்பத்தை சேர்ந்த முக்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இவர்களின் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடக்கும் என்றும் அதில் தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.