மதுரையில் நடிகர் ரஜினிக்காக ரசிகர் செய்த சிறப்பான செயல்- வைரலாகும் புகைப்படம்..!

0

இந்திய சினிமா பெருமையாக கொண்டாடும் டாப் நடிகர் ரஜினிகாந்த்.திரைத்துறையில் இத்தனை வருடங்கள் கழித்தும் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருந்து வருகிறார், அதற்கு உதாரணமாக அவரது நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் படத்தை கூறலாம்.

படம் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கியது, வசூலிலும் பெரிய லாபத்தை கொடுத்தது.இப்போது அவர் தனது 170 மற்றும் 171 படங்களின் வேலைகளில் படு பிஸியாக உள்ளார்.

ரசிகர் கட்டிய கோவில்
நடிகைகள் குஷ்பு, நயன்தாரா, சமந்தா, நிதி அகர்வாலுக்கு கோயில் கட்டி சிலைவைத்த ரசிகர்கள் பற்றி இதுவரை பார்த்திருப்போம். இப்போது அந்த லிஸ்டில் நடிகர் ரஜினிகாந்த் இணைந்துள்ளார்.

ஆமாம் மதுரையில் இருக்கும் ரசிகர் ஒருவர் ரஜினிக்கு சுமார் 250 கிலோ கருங்கல்லில் ரஜினிகாந்துக்கு சிலையும் வைத்து தினமும் வழிபாடு நடத்தி வருகிறாராம் அந்த ரசிகர்.

Leave A Reply

Your email address will not be published.