மறைந்த சீரியல் நடிகர் மாரிமுத்துவிற்கு ரசிகர்கள் வைத்து சிலை- எங்கே தெரியுமா?

0

நடிகர் மாரிமுத்து
தமிழ் சினிமாவில் பெரியதாக சாதிக்க வேண்டும் என தேனி மாவட்டத்தில் இருந்து கடந்த 25 வருடங்களுக்கு முன்பு வந்தவர் தான் மாரிமுத்து.ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்து பின் இயக்குனராக சில படங்கள் எடுத்தார், ஆனால் பெரிய அளவில் பேசப்படவில்லை. பின் நடிப்பில் இறங்கிய அவருக்கு அடித்த ஜாக்பாட் தான் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல்.

இதில் ஆதி குணசேகரனாக வில்லனாக நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றார். இந்த தொடர் கொடுத்த ரீச் ஜெயிலர், இந்தியன் 2, சூர்யாவின் கங்குவா என தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார்.

வெற்றியை கொண்டாடி வந்த மாரிமுத்து கடந்த மாதம் 8ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

நடிகருக்கு சிலை
இந்நிலையில், விழுப்புரத்தில் நடிகர் மாரிமுத்துவுக்கு பாஜகவினர் சிலை வைத்துள்ளனர். மறைந்த நடிகர் மாரிமுத்து மற்றும் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கும் சிலை வைத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.