கிழக்கு சீமையிலே விக்னேஷ் என்ன ஆனர் தெரியுமா ? தற்போதைய நிலையை பார்த்து அ திர்ச்சியான ரசிகர்கள்.!

0

ஈரோடு பக்கத்தில் சின்னக் கிராமத்தில் பிறந்தவன் நான். சின்ன வயதிலிருந்து என் அம்மா அப்பாவைப் பார்த்த ஞாபகமில்லை. ஒரு போட்டோவில் என் அம்மா, அப்பாவுடன் நான் போட்டோவில் அதைத்தான் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்’’ என்று அந்த போட்டோவை எடுத்துக் காட்டி நம்மிடம் பேச ஆரம்பிக்கிறார், ‘சின்னத்தாயி’ படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ‘கிழக்குச் சீமையிலே’, ‘பசும்பொன்’, ‘அப்பு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் விக்னேஷ். ” ஈரோடு பக்கத்தில் மூலனூரில்தான் படித்தேன். அதை நினைத்து நிறைய நேரம் வருத்தப்பட்டிருக்கிறேன்” என்றவரிடம், ”சில ஆண்டுகளாக சினிமாவில் பார்க்க முடியவில்லையே’’ என்று கேட்டோம்.

”இடையில் படங்கள் இல்லாத காரணத்தால் பிசினஸில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். லேடீஸ் ஹாஸ்டல், ஜென்ஸ் மேன்சன் நடத்திக் கொண்டிருக்கிறேன். சொந்த ஊரில் இயற்கை விவசாயம் செய்கிறேன். அப்புறம் ‘விக்னேஷ் மக்கள் இயக்கம்’னு ஓர் இயக்கம் தொடங்கியிருக்கிறேன். பழக்குடி மக்களின் வாழ்வுக்காக தொடங்கப்பட்ட இயக்கம். இதை வைத்து அரசியலுக்கு வர மாட்டேன். மக்கள் சுய ம ரியாதையுடன் வாழ வேண்டும்; அதற்காகதான் தொடங்கினேன். என் வாழ்க்கையில் இடையில் சில குடும்ப பி ரச்னைகள் இருந்தது.

‘மகாநதி’ படத்தில் கமல் எப்படி தன் மகளை தேடி அலைவரோ அதே மாதிரி என் அம்மாவைத் தேடி அ லைகிறேன். என் அம்மா ஹைதராபாத்தில் இருப்பதாக தகவல் வந்தது. ஒரு வாரம் ஹைதராபாத்தின் எல்லா வீதிகளிலும் தேடி அலைந்தேன். ஆனால், க ண்டுபிடிக்கவே முடியவில்லை. என் அம்மா என்னை விட்டுச் சென்றதால் அவங்க மேல் எனக்குக் கோ ப ம் வரவில்லை.

அவங்க ஏன் என்னைவிட்டுப் போனார்கள் என்பதே எனக்குத் தெரியாது. அவர்களுக்கு என்ன பி ரச்னையோ. எனக்கு என் அம்மாவை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும். அவ்வளவுதான். வாழ்க்கையில் பல வலிகளைத் தாண்டி வந்தவன் நான். என் வாழ்க்கையின் சோ கமான காலகட்டத்தின்போதெல்லாம் த-ற்-கொ-லை செய்து கொள்ளலாம் என்று தோன்றியிருக்கிறது.

சினிமாவில் பிஸியாக இருந்த எனக்கு ஒரு காலத்தில் சினிமா வாய்ப்பே வரவில்லை. ரொம்ப வ ருத்தப்பட்டு இருக்கிறேன். அந்தக் காலம் எல்லாம் ரொம்ப கொ டுமையான கா லகட்டம். திருமணம் முடிந்து அப்போதுதான் குழந்தை பிறந்திருந்தது. ரொம்பக் க ஷ்டப்பட்டேன். பிசினஸும் ந ஷ்டம். ஆனால், அந்த வலிகள் எல்லாத்தையும் தாண்டி வந்ததால்தான் வாழ்க்கையில் இப்போது நல்ல நிலைமையில் இருக்கிறேன். எந்தவொரு பி ர ச்னைக்கும் த-ற்-கொ-லை முடிவல்ல. அந்த வெற்றிடத்தைத் தா ண்டி வந்துவிட்டால் எல்லாம் நல்லதாக நடக்கும்’’ என்று புன்னகை செய்கிறார் நடிகர் விக்னேஷ்.

Leave A Reply

Your email address will not be published.