பாக்யராஜின் சின்னவீடு படத்தில் வரும் இந்த சிறுவனை நியாபகம் இருக்கா?? – இப்ப இவரு பிரபல முன்னணி இயக்குனர் !! வெளிவந்த தகவல்கள் !

0

தென்னிந்திய சினிமாவில் பொருத்தவரை ஆரம்ப காலத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர்கள் தற்போது சினிமாவில் முன்னணி நடிகர் நடிகைகளாக வலம் வந்த வண்ணம் உள்ளனர். சொல்லபோனால் கமல், சிம்பு துவங்கி மீனா வரை பல முன்னணி நடிகர்கள் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர்கள் தான். இந்நிலையில் தற்போதும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் பல குழந்தைகள் வளர்ந்து தற்போது இளம் நடிகர் நடிகைகளாக உருவெடுத்து வருகின்றனர். இருப்பினும் அந்த காலத்தில் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல நடிகர்களை இன்றைக்கு நாம் மறந்திருப்போம்.

இந்நிலையில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சலங்கை ஒலி இந்த படத்தில் பரதநாட்டிய கலைஞராக இருக்கும் கமல் ஒரு சிறுவனை அழைத்து போட்டோ எடுக்க சொல்வார் ஆனால் அந்த சிறுவன் தப்புதப்பாக போட்டோ எடுத்து கொடுப்பார் தெரியுமா மேலும் அதே சிறுவன் தான் பிரபல முன்னணி நடிகர் பாக்யராஜ் நடித்த சின்னவீடு படத்தில் கல்பனாவின் தங்கையாக வருவார் அந்த சிறுவன் யார் தெரியுமா உங்களுக்கு அவருடைய பெயர் சாகரி டோலேட்டி. இவர் தற்போது பிரபல முன்னணி இயக்குனராக உள்ளார் இதற்கு காரணம் இவருடைய அப்பா ஒரு டாக்டராக இருந்த போதிலும் தனக்கு

சிறுவயதிலேயே சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தால் தொடக்கத்தில் பல படங்களுக்கு கதை எழுதி கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் தான் சாக்ரின் அப்பாவுக்கும் பாலச்சந்தர் , பாக்யராஜ், கே விஸ்வநாத் என பல முன்னணி இயக்குனர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தான் சாக்ரிக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது இந்நிலையில் ஒரு சில படங்களில் நடித்த பின்னர் தனது படிப்பை அமெரிக்காவில் வி எப் எக்ஸ் கல்வியை முடித்துள்ளார். மேலும் இதனை தொடர்ந்து அமெரிக்காவிலேயே டிஸ்னி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இப்படி இருக்கையில் கமல் ஹாசன் தசாவதாரம் படத்திற்காக அமேரிக்கா சென்ற போது சாக்ரியை பார்த்து தன்னுடைய படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த குழந்தை தற்போது இயக்குனர் என்பதை எண்ணி

மகிழ்ந்தாராம். மேலும் சாக்ரி கமல் நடித்த உன்னை போல் ஒருவன் படத்தை தெலுங்கில் ஈநாடு எனும் பெயரில் இயக்கியிருந்தார் மேலும் அஜித்தின் பில்லா 2 படத்தையும் இயக்கி இருக்கிறார். பாலிவுட்டிலும் பிரபல முன்னணி நடிகை சொனக்ஷி சின்காவை வைத்து வெல்கம் நியூ யார்க் எனும் படத்தையும் இயக்கியுள்ளார்.மேலும் தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து கொலையுதிர் காலம் எனும் படத்தையும் இயக்கியுள்ளார். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் சாக்ரியின் பழைய புகைப்படங்கள் மற்றும் சமீபத்திய புகைப்படங்கள்

தற்போது இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த மக்கள் இந்த பையனா இப்படி மாறிட்டாரு என வாயடைத்து போயுள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.