காவாலா பாடலால் தமன்னாவிற்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்… குவியும் வாழ்த்துக்கள்..!

0

ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்ற காவாலா பாடல் படும் வைரலானதால் ஜப்பான் நிறுவனத்தின் இந்திய தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்ட தகவல் தற்போது வைரலாகி வருகின்றது.நடிகை தமன்னா
தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் தமன்னா. அதனைத் தொடர்ந்து ஆனந்த தாண்டவம், சுறா, அயன், சிறுத்தை, பையா போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார்.

தமன்னாவிற்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப்படங்களில் நடித்தும் தனக்கென தனி தனி மொழி ரசிகர்களை ஒன்றாக சேகரித்திருக்கிறார். இவர் தற்போது சூப்பர் ஸ்டாருடன் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இன்னும் அதிகம் பிரபலமானார்.

தமன்னா நடித்த ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்ற காவாலா பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டி சென்றுள்ளது. அதாவது ஜப்பானில் உள்ள புகழ்பெற்ற அழகு சாதன நிறுவனமான ஷிசிடோவின் புதிய இந்திய தூதராக தமன்னா நியமிக்கப்பட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாது இந்த புகழ் பெற்ற அழகு சாதன நிறுவனமான ஷிசிடோவின் முதல் இந்திய தூதரும் தமன்னா தான் என்ற பெருமையும் இவருக்கு உள்ளது. இதனால் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், இவருக்கு இப்படியொரு அங்கீகாரம் கிடைக்க காவாலா பாடல் தான் காரணம் எனவும் சொல்லப்பட்டு வருகின்றது.

 

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

Leave A Reply

Your email address will not be published.