பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை வீட்டில் ஏற்பட்ட அகால மரணம்! சீரியல் முடியும் தருவாயில் இப்படியா?

0

பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் கம்பம் மீனா வீட்டில் ஏற்பட்டுள்ள அகால மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.பாண்டியன் ஸ்டோர்ஸ்
தனது நடிப்பினால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் தான் கம்பம் மீனா. இவர் தற்போது பிரபல ரிவியில் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகின்றார்.ஆம் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவிற்கு நல்ல தோழியாக செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதே போன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யாவின் சித்தியாக நடித்து வருகின்றார்.

குறித்த சீரியல் விரைவில் முடியவுள்ள நிலையில், சீரியலில் தம்பியாக நடிக்கும் நடிகர் கதிர் தன்னுடைய குழுவின் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.இவ்வாறு முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், கம்பம் மீனா வீட்டில் சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

கம்பம் மீனா
கம்பம் மீனா இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் அக்கா மகனின் மரணம் குறித்து உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.சில தினங்களுக்கு ஆசையாக சித்தி என்று வழியனுப்பி வைத்த தனது அக்கா மகன் இன்று உலகத்தில் இல்லை என்று வருத்தத்தோடு பதிவிட்டுள்ளார்.

அதில் “என்னடா அவசரம் நீ தானடா காரியக்காரன்… தீஷிகனுக்கு ஐந்து வயது ஆகட்டும். அவனை எப்படி கொண்டு வரேன் பாரு சித்தினு சொல்லி 4 நாள் தான்டா ஆகுது.. நீ அடுத்த தடவை வரும்போது நான் எப்படி இருக்கேன் பாரு சித்தின்னு சொன்னியே… நாலே நாள்ல என்ன வர வச்சுட்டியே பாண்டி.. ஐயோ என்னடா இது காலகொடுமை… இப்படி 34 வயசிலேயே எமனுக்கு பலி கொடுத்துட்டமேடா பாண்டி..

நா வந்துட்டு இருக்கேன் டா வாசல்ல வந்து என்னையே வா சித்தின்னு சொல்லுவியே… பாண்டி” என்று கண்ணீரோடு அவருடைய அக்காள் மகனின் புகைப்படத்தை கம்பம் மீனா வெளியிட்டு இருக்கிறார்.கம்பம் மீனாவின் இந்த பதிவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.