விஜய் சேதுபதியின் உண்மையான பெயர் இது இல்லையா…! சினிமாவிற்காக மாற்றிக்கொண்ட பெயர் இதுதான்..!

0

சினிமாவில் வித்தியாசமான நடிப்பைக் காட்டி பலரின் மனதில் இடம்பிடித்த விஜய் சேதுபதி பற்றிய ஒரு உண்மை தற்போது வைரலாகி வருகின்றது.விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர்தான் நடிகர் விஜய் சேதுபதி. சினிமாவில் எவ்வித பின்புலமும் இல்லாமல் தன் திறமையாலும் நன் வித்தியாசமான நடிப்பாலும் தனக்கென ஒரு இடத்தையும் மக்கள் மனதில் ஒரு இடத்தையும் பிடித்துக் கொண்டார்.

ஆரம்பத்தில் எம்.குமரன் சன் ஆஃப் மகாலெட்சுமி, நான் மகான் அல்ல போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின் கதாநாயகனாக பீட்சா படத்தில் நடித்திருந்தார்.

அதன் பின் அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாம் அவருக்கு மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது. வெறும் கதாநாயகனாக நடித்து வந்த விஜய்சேதுபதி பேட்ட, விக்ரம், மாஸ்டர், ஜவான் திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்து மாஸ் காட்டியிருக்கிறார்.


இந்நிலையில், தற்போது தொடர்ந்து நடித்து வரும் விஜய்சேதுபதி பற்றிய உண்மை வெளியாகியுள்ளது. அதாவது, ஒரு நேர்காணலில் தன் உண்மையான பெயர் என்ன என்பதை பற்றி அவர் கூறியிருக்கிறார்.

இது இல்லையாம் அவருடைய முழுப்பெயர் விஜய குருநாத சேதுபதி காளிமுத்து என்பது தான் அவரின் பெயராம். இந்தப் பெயர் மிக நீளமாக இருப்பதால் சினிமாவிற்கு வந்த பிறகு விஜய் சேதுபதி என சுருக்கிக் கொண்டாராம்.

Leave A Reply

Your email address will not be published.