அம்மா இதை செய்திருக்கவே மாட்டேன்! மகளை நினைத்து விஜய் ஆண்டனி மனைவி உருக்கம்..!

0

விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா மறைந்த தனது மகள் மீராவை நினைத்து வெளியிட்டுள்ள பதிவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விஜய் ஆண்டனி
தமிழ் சினிமாவில் பன்முக திறமையுடன் வலம்வரும் முன்னணி நடிகரான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா கடந்த 19ம் தேதி உயிரிழந்தார்.இவருக்கு மீரா மற்றும் லாரா இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மீரா சர்ச் பார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.மன அழுத்தம் காரணமாக இவர் செப்டம்பர் மாதம் 19ம் தேதி அதிகாலை 3 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவரது தற்கொலைக்கு அவர் மன அழுத்தம் காரணம் என்று கூறப்படும் நிலையில், அவரது குடும்பத்தினர் இன்னும் மீளாத சோகத்தில் இருந்து வருகின்றனர்.

விஜய் ஆண்டனி மகள் மறைவினால் மீண்டு வரமுடியவில்லை என்றாலும், தன்னால் யாரும் பாதிக்கக்கூடாது என்ற சிந்தனையில் படங்களில் கவனம் செலுத்தி வருகின்றார்.

தாய் பாத்திமா வெளியிட்ட பதிவு
விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா உருக்கமாக கண்ணீர் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், 16 வருடங்கள் மட்டுமே நீ வாழ்வாய் என்று தெரிந்திருந்தால், உன்னை அருகிலேயே வைத்திருப்பேன். சூரியனுக்கும், சந்திரனுக்கும் கூட உன்னைக் காட்டியிருக்க மாட்டேன்..


இப்போதும் உன் எண்ணங்களில் மூழ்கி இறந்து போகிறேன்… நீ இல்லாமல் வாழ முடியாது…. அம்மா அப்பாவிடம் வந்துவிடு… லாரா உனக்காக காத்திருக்கிறாள்… லவ் யூ தங்கமே என்று சோகமான பதிவை பதிவிட்டுள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.